Friday, 16 March 2018

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்


தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..


1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

# மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்

Wednesday, 14 March 2018

விபச்சாரிகளும் அரசியல் கூட்டனிகளும்



விபச்சாரிகளும் அரசியல் கூட்டனிகளும்

காசு கொடுத்தால் தன் உடலை நல்லவனுக்கும் இறையாக்குவால்
கெட்டவனுக்கும் இறையாக்குவால்....

அது போல தான் இன்று அரசியலில் நடைபெறுகிறது

பதவி கொடுத்தால் நல்லவனுக்கும் ஆதரவு...
கெட்டவனுக்கும் ஆதரவு...

என்ற நிலையில் தான் இன்றைய சில்லறை கட்சிகள் உள்ளன...
எத்தனை பதிவிகள் தருவீர்கள் இது தான் சில்லறை கட்சிகளின் அரசியல் பேச்சுவார்த்தையாக உள்ளது...

மக்களுக்கு என்ன செய்வீர்கள் என்று யாரும் கேட்பதில்லை...




Sunday, 11 March 2018

பெரியார் சிலை கோவில் சிலை

பெரியார் சிலை

நாத்திகம்:

கோவில் சிலையை வழிபடுவது மூடத்தனம் என்று சொன்னார் பெரியார்

ஆனால் இன்று பெரியாருக்கே சிலை வைத்து வணங்குகின்றனர்....



இன்றைய\திராவிட கழக வாரிசுகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய உருவ பொம்மையைஎரிகின்றனர் 

சிலையை வழிபடுவது மூடத்தனம் என்றால் 

உருவ பொம்மையை எரிப்பதும் மூடத்தனம் தானே?



கொள்கை:

ஒரு தலைவர் தன் மனைவியிடம் திராவிட கொள்கைகளை சொல்லி கோவிலுக்கு செல்வதை தடுக்க முடியாவிட்டால்...

அவர் மற்றவர்களுக்கு புத்தி சொல்லாமா?

Saturday, 10 March 2018

மீனவர்கள் பிரச்சனைக்கு எனது தீர்வு

போராட்டம் செய்யும் முறை

கடல் கரையில் போராட்டம் செய்தால் நீங்கள் உதாசீனம் செய்யபடுவீர்கள்
நடுகடலில் இறங்குங்கள்...

போராட்டம் நடத்தினால் இந்தியா அரசு மட்டும் அல்ல உலகமே உங்களை திரும்பி பார்க்கும்...

கட்சதீவு இதை தானமாக வழங்கியதன் விளைவு நம் வாழ்வாதாரம் பாதிக்கபடுகிறது...

போராட்டம் செய்யும் முறையை மாற்றினால் தான் நம் உரிமை நமக்கு கிடைக்கும்...

உதாரணமாக ஜல்லிக்கட்டு...

மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் tamilnadu political DMK ADMK RAJINI KAMAL

அரசியல்வாதியின் தகுதிகள்


தற்போது உள்ள தலைவர்கள் தன் அரசியல் எல்லைகளுக்கு உட்பட்ட இடத்தில் நிகழும் அசம்பாவிதம் பற்றி  தொலைகாட்சியில் மட்டும் கவலைப்படுகின்றனர்...

ஒரு தலைவனுக்கு உள்ள குணம் எங்கு தவறு நடந்தாலும் அதை கேள்வி கேட்பது... அதை பற்றி கவலைபடுவது...

சற்று சிந்தித்து பாருங்கள் தமிழ்நாட்டு தலைவர்கள் இலங்கை பிரச்சினையை தவிர தன் அரசியல் எல்லைக்கு அப்பாற்பட்ட பிரச்சனைக்கு குரல் கொடுத்துள்ளர்களா?

ஒரு உயிர் துன்பத்தில் இருக்கும் போது அதை பற்றி கவலைகொண்டு அதை காப்பாற்றுவது தான் மனித இயல்பு...

இந்த எண்ணம் தற்போது உள்ள அரசியல் தலைவர்களிடம் உள்ளதா?

இவர்களின் இரங்கல் அரசியல் லாபம் உள்ளது என்பது தான் உண்மை...